முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப உறவினர்களுடன் நுவரெலியாவுக்கு சென்றிருந்த பிரேமலால் ஜயசேகரவுக்கும், அவிசாவளையிலிருந்து அங்கு சுற்றுலா வந்திருந்த ஒரு குழுவினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பிரேமலால் ஜயசேகர தனது கைத்துப்பாக்கியைக் காட்டி அந்தத் தரப்பினரை அச்சுறுத்தியதாக நுவரெலியா பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ரவீந்திர பிரேமலால் உள்ளிட்ட அதிகாரிகள் அவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கிக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் 2025ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )