ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் நாளை நிறுத்தம்

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் நாளை நிறுத்தம்

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் நாளை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதால், சேவைகள் நிறுத்தப்படுவதாக
என ஆட்கள் பதிவுத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களில் நடைபெறும் ஒருநாள் சேவை உட்பட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (17) இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )