
தோல்வியில் நிறைவடைந்த அமெரிக்க, ஈரான் உடன்பாடு
ஈரான் மற்றும் அமெரிக்க போர் தொடர்பாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த அமைதிப் பேச்சுவார்த்தைகள்எந்த உடன்பாடும் இன்றி முடிவடைந்துள்ளன.
ஈரானின் பேச்சுவார்த்தைக் குழு வொஷிங்டனின் நிபந்தனைகளை ஏற்கவில்லை என கூறிய அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இதுவே எங்களின் இறுதி மற்றும் சிறந்த முன்மொழிவு என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரானின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்கா அளவுக்கு அதிகமான கோரிக்கைகளை முன்வைத்ததாக குற்றம் சுமத்தி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொண்டது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகள் வெற்றியடைவது ஆரம்பத்திலிருந்தே சவாலானதாக இருந்ததாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, லெபனானில் ராக்கெட் ஏவுதளமொன்றை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் வொஷிங்டனில் தனித்தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்த இரு தரப்பினரும் திட்டமிட்டுள்ளனர்.
