விமான நிலையத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் கைதான சீனப் பிரஜை

விமான நிலையத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் கைதான சீனப் பிரஜை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீன நாட்டுப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க அதிகாரிகளினால் இன்று (11) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய சீன நாட்டு வியாபாரி என்பதுடன், அவர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 12.50 அளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் 26,100 சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சுங்க அதிகாரிகளின் முறையான சோதனையின் போது கண்டறியப்பட்டது.

குறித்த சிகரெட் தொகுதி அரசுடைமையாக்கப்பட்டதுடன், சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )