தீவுப்பகுதிகளில் இடர் கொடுப்பனவு நிறுத்தம்

தீவுப்பகுதிகளில் இடர் கொடுப்பனவு நிறுத்தம்

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட பின்தங்கிய தீவுப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளை வகைப்படுத்தியதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ இது குறித்துத் தெரிவிக்கையில், மாகாண சபைகளினால் முன்வைக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த வகைப்படுத்தலில் சிக்கல்கள் இருப்பதை அமைச்சு கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகைப்படுத்தல் செயல்பாட்டில் எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டறிந்து அதனைச் சரி செய்ய ஒரு விசேட குழு நியமிக்கப்படவுள்ளது.

அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களுக்கு மீண்டும் கொடுப்பனவுகளை வழங்கத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என செயலாளர் உறுதியளித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )