
ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரையும் பலியெடுத்த ‘போர்’
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கமல் கர்ராஸி உயிரிழந்துள்ளார்.
ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி தெஹ்ரானில் உள்ள அவரது வீடுமீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையிலேயே தற்போது அவரும் உயிரிழந்துள்ளார்.
கமல் கர்ராஸி 1997 முதல் 2005 வரை ஈரான் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றியதோடு, ஈரானின் உச்ச தலைவருக்கு ஆலோசகராகவும் மற்றும் மூலோபாயக் குழுவின் தலைவராகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஈரானிய அரசியலில் ஒரு சீர்திருத்தவாதப் போக்கைக் கொண்ட தலைவராக இவர் பரவலாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
