ஈரான் – அமெரிக்கா 2 வாரம் போர் நிறுத்தம் : இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை

ஈரான் – அமெரிக்கா 2 வாரம் போர் நிறுத்தம் : இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை

ஈரான் மீது 2 வார காலத்​துக்கு தாக்​குதல் நடத்த மாட்​டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறி​வித்​திருந்தார்.

ஈரானும் இந்த தற்​காலிக போர் நிறுத்​தத்​துக்கு ஒப்​புக்​கொண்​டுள்​ளது. இதனால், இரு தரப்​புக்​கும் இடையே இடைக்​கால போர் நிறுத்​தம் ஏற்​பட்​டுள்​ளது. இந்த போர் நிறுத்​தத்​துக்கு பல்​வேறு நாடு​கள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன.

அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்​குதல் நடத்​திவரும் நிலை​யில், தனது கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் உலகின் முக்கிய ஜலசந்​தி​யான ஹார்​முஸ் கால்வாயை ஈரான் மூடி​வைத்​துள்​ளது.

இதனால் வளை​குடா நாடு​களில் இருந்து கச்சா எண்ணெய் கப்​பல்​கள் உலகின் பிற நாடு​களுக்கு செல்வதில் பெரும் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. கச்சா எண்ணெய் சர்​வ​தேச சந்​தைக்கு வரு​வ​தில் சிக்​கல் ஏற்பட்டுள்​ள​தால் அதன் விலை கடுமை​யாக உயர்ந்துள்ளது. இதன் விளை​வாக பல்​வேறு நாடு​கள் சமையல் எரி​வாயு தட்​டுப்​பாடு, பெட்​ரோல், டீசல் விலை உயர்வு உள்​ளிட்ட பாதிப்​பு​களை எதிர்​கொண்​டுள்​ளன.

இதனிடையே டொனால்ட் ட்ரம்ப், அனைத்து கப்​பல் போக்​கு​வரத்​துக்​காக ஹார்​முஸ் கால்வாயை திறக்க ஈரானுக்கு காலக்​கெடு விதித்​தார். இந்​தக் காலக்​கெடு நேற்று அதி​காலை 5.30 மணி​யோடு நிறைவடைய இருந்​தது. இந்த சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்​கெடுவை 2 வாரங்​களுக்கு நீட்​டிக்க ட்ரம்ப்புக்கு பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டு​கோள் விடுத்​தார்.

அதன்​படி, ஈரான் மீதான தாக்​குதலை 2 வார காலத்​துக்கு நிறுத்தி வைக்க  ட்ரம்ப் ஒப்​புதல் அளித்​தார். மேலும் இது ஒரு போர் நிறுத்​தம் என்​றும் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து போர் நிறுத்​தம் செய்யப்படும் இந்த 2 வாரங்​களுக்கு ஹார்​முஸ் கால்வாயை திறக்​க​வும் ஈரான் சம்​ம​தித்​துள்​ளது.

இதைத் தொடர்ந்து இடைக்​கால போர் நிறுத்​தம் செய்ய உதவியதற்​காக பாகிஸ்​தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலை​யில், நிரந்தர போர் நிறுத்​தத்​துக்​காக ஏப்​ரல் 10-ம் திகதி இஸ்​லா​மா​பாத்​தில் அமைதி பேச்​சு​வார்த்தை நடத்த பாகிஸ்​தான் ஏற்​பாடு செய்​துள்​ளது. இந்த போரில் பாகிஸ்​தான் வெளிப்​படை​யான மத்தியஸ்தராக அறியப்​பட்​டாலும் பின்​னணி​யில் சீனாவின் பங்கு இருப்​பதும் தெரிய​வந்​துள்​ளது.

ட்ரம்ப் அறி​விப்பு

போர் நிறுத்​தம் தொடர்​பாக ட்ரம்ப் கூறும்​போது, “பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இராணுவ தளபதி அசிம் முனீரின் கோரிக்​கையை ஏற்று ஈரான் மீதான தாக்​குதலை நிறுத்தி வைக்​கிறேன். 2 வார காலத்​துக்கு ஈரான் மீது தாக்​குதல் மேற்​கொள்ள மாட்டோம். ஹார்​முஸ் கால்வாயை  முழு​வது​மாக திறக்கவும், உடனடியாக மற்​றும் சரக்கு கப்​பல்​கள் பாது​காப்​பாக கடக்க வேண்​டும்” என சமூக வலை​தளத்​தில் அமெரிக்க ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் மேலும் கூறும்​போது ‘‘உலக அமைதிக்கு இது ஒரு மகத்​தான நாள். ஈரானும் இதைத் தான் விரும்​பு​கிறது. அவர்​களுக்​குப் போதும் என்​றாகி​விட்டது. மற்ற அனை​வருக்​கும்​கூட அதே நிலை​தான். ஹார்​முஸ் கால்வாயில் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலைக் கையாள்​வ​தில் அமெரிக்கா உதவும். அங்கு ஏராள​மான ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கைகள் நடை​பெறும். பெரும் பொருளா​தார ஆதா​யத்தை ஈட்ட முடி​யும். ஈரான் தனது மறுசீரமைப்​புப் பணி​களைத் தொடங்க முடியும்’’ என்​றார்.

இதைத் தொடர்ந்​து, ஈரானின் உச்ச தேசிய பாது​காப்பு கவுன்​சில் இந்த 2 வார கால போர் நிறுத்​தத்தை ஏற்​றுக் கொண்​டுள்​ளது. ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி கூறும்​போது, ‘‘எங்​களுக்கு எதி​ரான தாக்​குதல் நிறுத்​தப்​பட்​டால் நாங்​கள் மேற்​கொள்​ளும் தாக்​குதலும் நிறுத்​தப்​படும். ஈரான் புரட்​சிகர இஸ்​லாமிய படை​யுடன் இணைந்து ஹார்​முஸ் கால்வாயில் பாது​காப்​பான கப்​பல் போக்​கு​வரத்து உறுதி செய்​யப்​படும்’’ என அவர் கூறியுள்ளார்.

இஸ்​ரேல் ஆதரவு

ஈரான் மற்​றும் அமெரிக்கா இடையி​லான இடைக்​கால போர் நிறுத்​தத்​துக்கு இஸ்​ரேல் ஆதரவு தெரி​வித்​துள்​ளது. போர் நிறுத்த அறி​விப்​புக்​காக சுமார் 11 மணி நேரம் இடை​வி​டாது பாகிஸ்​தான் பணி​யாற்​றிய​தாக சர்​வ​தேச செய்தி நிறு​வனம் ஒன்று தெரி​வித்​துள்​ளது. உலக வல்​லரசு நாடுகள் போர் நிறுத்​தம் சார்ந்த முயற்​சிகளை முன்னெடுக்​காத சூழலில் பாகிஸ்​தான் இதை மேற்கொண்​டிருந்​தது கவனிக்​கத்​தக்​கது.

ஈரான் மீது தாக்குதல்

இந்நிலையில் சண்டை நிறுத்தத்துக்கு இடையே, ஈரானின் லவன் தீவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நேற்று காலை 10 மணியளவில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. சண்டை நிறுத்தத்துக்கு இடையே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரி நாடு தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது. ஆனால், தாக்குதல் நடத்தியது அமெரிக்கப்படையா அல்லது இஸ்ரேலா எனத் தெரியவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

யுரேனி​யம் செறிவூட்​டக் கூடாது: அமெரிக்கா நிபந்​தனை

யுரேனி​யத்தை செறிவூட்​டும் பணி​யைத் தொடங்​கக்​கூடாது என்​பது உள்​ளிட்ட பல நிபந்​தனை​களை ஈரானுக்கு அமெரிக்கா விதித்​துள்​ளது. இதுதொடர்​பாக ட்ரம்ப் தனது சமூக வலை​தளத்​தில் கூறியுள்ளதாவது: போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​துள்ள நிலை​யில் அணு ஆயுதங்​களைத் தயாரிக்க உதவும் யுரேனி​யம் செறிவூட்​டும் பணியை ஈரான் நடத்​தக்​கூ​டாது.

இந்த விடயத்​தில் ஈரானுடன், அமெரிக்கா நெருக்​க​மாக இணைந்து செயல்​படும். ஈரானில் மிக​வும் ஆழத்​தில் புதைக்​கப்​பட்​டுள்ள அனைத்து அணுசக்தி பொருட்களையும் தோண்டி எடுத்து அமெரிக்கா அகற்றும். ஈரான் மீது வி​திக்​கப்​பட்​டுள்ள வரி​கள், தடைகளில்​ இருந்​து நிவாரணம்​ அளிப்​பது தொடர்​பாக பேச்​சு​வார்த்​தை நடத்​தி வரு​கிறோம்​. அந்​த 15 அம்​சங்​களில்​ இருந்​து பலவற்​றுக்​கு ஏற்​கெனவே ஒப்​புதல்​ அளிக்​கப்​பட்​டுவிட்​டது. இவ்​வாறு டொனால்ட் ட்​ரம்​ப்​ தெரிவித்​துள்​ளார்​.

ஈரான் – அமெரிக்​கா, இஸ்​ரேலுக்​கும் இடையி​லான போர் நிறுத்​தத்​துக்கு பல நாடுகள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன. இஸ்லாமாபாத்தில் நாளை முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )