
நுவரெலியா கிரகரி வாவியில் மிதக்கும் சடலம்
நுவரெலியா கிரகரி வாவியில் அடையாளம்தெரியாத ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் இன்று (06) திங்கட்கிழமை காலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இமத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் உயிரிழப்பு கொலை அல்லது தற்கொலையா என்பது குறித்து பலகோணங்களில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
