புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அதிகாலை 5.00 மணிக்கு திக்கோடை ஆனந்தப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்ஹாவலை, திக்கோடை பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்தனர்.

அத்துடன் சந்தேகநபர்களை புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய நவீன ஸ்கேனர் இயந்திரம் மற்றும் வேன் ஒன்றையும் பொலிஸார் மீட்டனர்.

கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )