
பொலிஸ் அதிகாரிகள் கடமைகளை இடையூறின்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு
பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளை எந்தவொரு இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
களுத்துறை பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற பொலிசாரின் பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பங்கேற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக 280 பொலிஸ் கான்ஸ்டபள்கள் கடமைக்கென ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய கான்ஸ்டபளாக ஏ.எம்.ஓ.வீ. செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
