
ஹட்டனில் Safari பஸ் சேவை
சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பஸ் டிப்போ பகுதியில் Safari பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரத்மலான பஸ் டிப்போவிலிருந்து பெறப்பட்ட ஒரு பழைய வாகனத்தை புனரமைத்து, இந்த பஸ் சேவைக்கென பயன்படுத்தப்பட்டுள்ளது.
திட்டத்திற்கென 04 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
குறித்த பஸ் வண்டியில் 42 இருக்கைகள், ஒலி அமைப்பு, குளிரூட்டி மற்றும் தொலைக்காட்சி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், சுற்றிப் பார்ப்பதற்காக திறந்த மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியான அணுகலை அனுமதிக்கும் வகையில் குறித்த பஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
