தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்

தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. கடந்த மார்ச் 30 ஆம் திகதி வேட்​புமனு தாக்​கல் தொடங்​கிய நிலையில், நிறைவடைய 02 நாட்​கள் உள்​ளன.

கடந்த 02 ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியாக தமிழகம் முழு​வதும் தீவிர பிரச்​சா​ரத்தை தொடங்​கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி​. எதிர்வரும் 19 ஆம் திகதியன்று சேலத்​தில் நிறைவு செய்​கிறார்.

இதனிடையே அதி​முக​வின் நட்​சத்​திர பேச்​சாளர்​களான காளி​யம்​மாள், நடிகர் ரவி மரியா இன்று பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கின்​றனர்.

அதி​முக செய்​தித்​தொடர்​பாளர் கல்​யாணசுந்​தரம் நாளை முதல் ​21 ஆம் திகதி வரை சென்​னை, கோவை, திருச்​சி, ஈரோட்டிலும், வைகைச்​செல்​வன் நாளை மறுதினம் 6 முதல் 21 ஆம் திகதி வரை சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரத்திலும், கொள்​கைப்​பரப்பு துணை செய​லா​ளர்  நடிகை கௌதமி எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையும் பிரச்​சா​ரம்​ மேற்​கொள்​ள உள்​ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )