
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு
இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் ஒருமுறை நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவடையும் காலம் குறித்து இன்று நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் இடமாற்றச் செயற்பாடுகளை அரசியல்மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதனால் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் முடங்கியுள்ளதுடன், பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
