கொழும்பின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை 24 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை 24 மணிநேர நீர் வெட்டு

நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் நீர் தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்த ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.

பாதுக்க: இன்று (02) இரவு 8.00 மணி – நாளை (03) இரவு 8.00 மணி வரை

ஹோமாகம: நாளை (03) இரவு 8.00 மணி- ஏப். 04 இரவு 8.00 மணி வரை

பெலன்வத்த: ஏப். 04 ஆம் திகதி இரவு 8.00 மணி – ஏப். 05 ஆம் திகதி இரவு 8.00 மணி வரை

நீர் விநியோகம் நிறுத்தப்படும் நேரங்கள் குறித்து அந்தந்தப் பகுதி நுகர்வோருக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் நீர் விநியோகம் முழுமையாகத் தடைப்படும் என்பதால், நுகர்வோர் தங்களுக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )