
இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கையில் வீழ்ச்சி
இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Institute of Directors வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையும் உலகளாவிய பொருளாதார நிலையும் காரணமாக இங்கிலாந்தில் நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கை (economic confidence) மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக பல நிறுவனங்கள் எதிர்கால முதலீடுகள் மற்றும் பணியாளர் ஆட்சேர்ப்பில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் Institute of Directors வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் இங்கிலாந்து வணிக சூழலுக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
TAGS இங்கிலாந்தில்
