
ஈரான் போர் – இங்கிலாந்து மக்களிடையே வேரூன்றும் அவநம்பிக்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பிரித்தானியாவில் பெரும்பாலான குடும்பங்களின் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏற்கனவே அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், ஈரான் போர் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலால், எரிபொருள், எரிவாயு, உரம் உள்ளிட்ட பிற மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இது மற்றொரு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Which என்ற அண்மைய நுகர்வோர் உள்நோக்கு கண்காணிப்பின்படி, விலை அழுத்தங்கள் காரணமாக, சுமார் 14 மில்லியன் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பங்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் செலவைச் சமாளிப்பதற்காக, சேமிப்பைப் பயன்படுத்துவது, உடைமைகளை விற்பது அல்லது கடன் வாங்குவது போன்ற குறைந்தபட்சம் ஒரு மாற்றத்தையாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மார்ச் 13ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தில், இங்கிலாந்து பொருளாதாரத்தின் எதிர்காலம் மீதான நம்பிக்கை 13 வீதம் சரிந்து -56 என்ற மதிப்பெண்ணை எட்டியுள்ளது.
இது 2022ஆம் ஆண்டின் இறுதிக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
