இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது

இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம், இன்று (28) எரிபொருள் கப்பல் ஒன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர உள்ளது.

20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருள் விநியோகம், இலங்கையில் அண்மையில் அதிகரித்துள்ள எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு முக்கிய நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற சவால்களை இலங்கை எதிர்கொள்ளும் நிலையில், இந்த வரவு சந்தை நிலையை சீராக்க உதவும் என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த உதவி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான வலுவான பொருளாதார மற்றும் மூலதன ஒத்துழைப்பை மீண்டும் வெளிப்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார சவால்களின் போது, இந்தியா கடன் வசதிகள், எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.

இந்த எரிபொருள் கப்பல் வந்தடைந்த பின்னர், அவை விரைவாக உள்நாட்டு விநியோக அமைப்புகள் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பகிர்ந்து வழங்கப்படும் எனவும், முக்கிய சேவைகள் தடையின்றி செயல்பட இது உதவும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த எரிபொருள் வரவு, இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, இந்தியா – இலங்கை உறவுகள் தொடர்ந்து வலுவாக உள்ளதை வெளிப்படுத்தும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )