பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கு ஈரான் கால்பந்து அணி தயார்

பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கு ஈரான் கால்பந்து அணி தயார்

பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக ஈரான் தேசிய கால்பந்து அணி தொடர்ந்து தயார் நிலையில் இருப்பதாகவும் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை என்றபோதும் அமெரிக்காவில் நடைபெறும் போட்டியை புறக்கணிக்கவுள்ளதாகவும் அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் மஹ்தி தாஜ் குறிப்பிட்டுள்ளார்.

2026 பிஃபா உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற முதல் அணிகளில் ஒன்றாக இருக்கும் ஈரான், மத்திய கிழக்கு போர் காரணமாக தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.

எதிர்வரும் ஜுன் 11 தொடக்கம் ஜூலை 19 வரை நடைபெறும் இந்தத் தொடரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. இதில் ஈரான் தனது ஆரம்ப சுற்று போட்டிகள் அனைத்தையும் அமெரிக்காவில் ஆடுகின்றபோதும் அந்தப் போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்ற ஈரான் கால்பந்து சம்மேளனம், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை கோரி இருந்தது.

என்றாலும், சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஈரானின் கோரிக்கைக்கு இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

இதேவேளை, பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக ஈரான் அணி துருக்கியில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் மஹ்தி தாஜ் கூறியுள்ளார்.

‘நாம் அமெரிக்காவை புறக்கணித்தபோதும் உலகக் கிண்ணத்தை புறக்கணிக்க மாட்டோம்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )