இங்கிலாந்தில் மாணவர் கடன் திட்ட மாற்றங்கள் 50 இலட்சம் பேர் பாதிப்பு

இங்கிலாந்தில் மாணவர் கடன் திட்ட மாற்றங்கள் 50 இலட்சம் பேர் பாதிப்பு

இங்கிலாந்தில் மாணவர் கடன் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக சுமார் 50 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றங்கள், குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களையும்,
இளம் தொழிலாளர்களையும் அதிகம் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடன் சுமை அதிகரித்து, வருமானம் உயரும் காலப்பகுதியில் இளைஞர்கள் நிதி அழுத்தத்தை எதிர்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “திட்டம் 2” மாணவர் கடன் திட்டமே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வருமான வரம்பிற்கு மேல் உள்ளவர்களிடமிருந்து 09 சதவீதம் கடனாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால், வருமான வரம்பு மூன்று ஆண்டுகள் முடக்கப்பட்டுள்ளதால், பலருக்கும் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை அதிகரித்துள்ளது.

சராசரியாக 3,000 பவுண்டுகள் வரை கூடுதல் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் குறைந்த வருமானம் பெறுவோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை இந்த தீர்மானத்திற்கு எதிரான எதிர்ப்பு அடுத்த மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )