
இலக்குகளில் எந்த மாற்றமும் இல்லை
ஈரான் தொடர்பான அமெரிக்காவின் இலக்குகளில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மிகவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.
பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், எபிக் ஃபியூரி நடவடிக்கை முற்றிலும் மாறுபட்டது.
இது மிகத் துல்லியமானது மற்றும் தீர்க்கமானது. அமெரிக்கா ஃபர்ஸ்ட் கொள்கையுடைய எமது ஜனாதிபதி நேரடியாக வழங்கிய இலக்குகள், முதல் நாளில் இருந்தது போலவே இப்போதும் உறுதியாக உள்ளன எனக் குறிப்பிட்டார்.
ஏவுகணைகள், ஏவுதளங்கள் மற்றும் ஈரான் மீண்டும் கட்டியெழுப்ப முடியாதவாறு அந்நாட்டின் கைத்தொழில் கட்டமைப்புகளை அழித்தல், அவர்களின் கடற்படையை அழித்தொழித்தல் மற்றும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்தல் போன்றவையே வொஷிங்டனின் இலக்குகள் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான் தனது தசாப்த கால நாட்டு வளங்களை அந்நாட்டு மக்களுக்காகப் பயன்படுத்தாமல், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் நிலத்தடி வசதிகளுக்காகவே செலவிட்டுள்ளது.
ஆனால் உலகின் வேறு எந்த இராணுவத்தாலும் செய்ய முடியாத வகையில் நாம் அவற்றைத் தேடி அழித்து வருகிறோம்.
அதன் முடிவுகள் அதனைப் எடுத்துக் கூறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
