ஈரானின் ‘மொசைக் பாதுகாப்பு’ உத்தி என்பது என்ன?

ஈரானின் ‘மொசைக் பாதுகாப்பு’ உத்தி என்பது என்ன?

இஸ்ரேலியத் தாக்குதலில் மூத்த ஈரானியப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அவரது மகன் மொர்தெசா லாரிஜானி மற்றும் ஓர் உதவியாளர் ஆகியோர் வீரமரணம் அடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் பசிஜ் போராளிக் குழுவின் தலைவர் குலாம் ரெசா சுலைமானியும் மரணம் அடைந்துள்ளார்.

அலி லாரிஜானி தனது மகளைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, ​​கிழக்கு தெஹ்ரானில் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது மரணம் சமூக ஊடகங்களிலும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், “இறைவனின் ஊழியர், இறைவனைச் சந்தித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அலி லரிஜானியின் படுகொலைக்கு ஈரானின் எதிர்வினை

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அல் ஜசீராவுக்கு அளித்த செவ்வியில், ஈரானிய அரசாங்க அமைப்பு ஒரு வலுவான அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

அதனால் எந்தவொரு தனிநபரின் இருப்பு அல்லது இல்லாமையாலும் அரசு அமைப்பு பாதிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் அமைப்பு தனிநபர்களால் அல்ல, நிறுவனங்களால் இயக்கப்படுகிறது என்பதையும், ஈரானியத் தலைமையை இலக்கு வைப்பது அரசின் அல்லது இராணுவத் திறன்களைப் பாதிக்காது என்பதையும் அமெரிக்காவும் இஸ்ரேலும் புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ‘மொசைக் பாதுகாப்பு’ முறை என்றால் என்ன?

ஈரானின் பாதுகாப்பு உத்தி, ஈரானிய இராணுவத் தலைவர் முகமது அலி ஜஃபாரியால் உருவாக்கப்பட்ட ‘மொசைக் பாதுகாப்பு’என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கோட்பாட்டின் கீழ், இராணுவ சக்தி ஒரு மையக் கட்டளையகத்திற்குப் பதிலாக பல்வேறு பிராந்திய அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), பசிஜ் படை, வழக்கமான இராணுவப் பிரிவுகள், ஏவுகணை மற்றும் கடற்படைகள் அனைத்தும் பரவலாக்கப்பட்ட ஆனால் தற்காப்பு வலையமைப்பாகச் செயல்படுகின்றன.

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை 31 மாகாணக் கட்டளைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் ஒவ்வொரு மாகாணமும் தனக்கே உரிய அளவிலான உளவுத்துறை, ஆயுதங்கள் மற்றும் கட்டளைத் திறன்களைக் கொண்டுள்ளது.

மத்திய தலைமை அல்லது ஒருங்கிணைப்பு அமைப்பு பாதிக்கப்பட்டாலும், உள்ளூர் பிரிவுகள் தாங்களாகவே தங்கள் செயல்பாடுகளைத் தொடர முடியும்.

ஈரானிய இராணுவக் கட்டமைப்பின் நோக்கம், அதனை முழுமையாகச் செயலிழக்கச் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் அளவிற்கு ஈரானின் பாதுகாப்பு அமைப்பை விரிவுபடுத்துவது ஆகும் என்று இராணுவ நிபுணர் கலாநிதி மைக்கேல் கொன்னல் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )