ஜனாதிபதி இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு

ஜனாதிபதி இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு 7.30 க்கு
விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்க விரும்பினால், வெள்ளிக்கிழமை அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவும் நாம் எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

to hold  briefing tonight

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )