
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 307ரூபா 73 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 315ரூபா 30 சதமாக பதிவாகியுள்ளது.
வளைகுடா நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

