
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் – விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
துபாய் விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
துபாய் அதிகாரிகளின் கூற்றுப்படி, விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டியை குறிவைத்து ஒரு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
துபாய் விமான நிலையத்திற்குச் செல்லும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் துபாய்க்கு செல்லும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
https://x.com/SriLankaTweet/status/2033365298108309933?s=20
உலகளாவிய விமான கண்காணிப்பு வலைத்தளம் விமான விவரங்களை வெளியிட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துபாய் விமான நிலையத்திலிருந்து விமானங்களை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக துபாய் அரச அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமான அட்டவணைகளுக்கு பயணிகள் தொடர்புடைய விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், நிலைமை மேம்படும் வரை விமானங்கள் நிறுத்தப்படுவது தொடரும் என்றும் துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாய் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்கள் பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது, விமானங்கள் குறித்த கூடுதல் புதுப்பிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் மற்றும் தோஹாவின் குறிப்பிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று ஈரான் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தாக்குதல்கள் காரணமாக துபாய் மற்றும் தோஹாவின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் அடுத்த சில மணிநேரங்களில் வெளியேற வேண்டும் என்று ஈரானின் ஊடக செயல்பாட்டு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
