இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.

“இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புபட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது.

நேற்று இரவு மாத்திரம் 7 முறை எச்சரிக்கைச் சங்கொலிகள் ஒலித்தன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, இராணுவ மற்றும் தொடர்பாடல் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணைகளை ஏவும் போக்குக் காணப்படுகிறது.

இது தவிர, சமூக வலைதளங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக அறிமுகமில்லாத எண்கள் அல்லது கணக்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு செய்தியையும் அல்லது கோப்பையும் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று அறிவித்துள்ளன.

ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )