எரிவாயு தட்டுப்பாடு – தென்னிந்தியாவில் மூடப்படும் உணவகங்கள்

எரிவாயு தட்டுப்பாடு – தென்னிந்தியாவில் மூடப்படும் உணவகங்கள்

சென்னை உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலர் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு  பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எவ்வாறாயினும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தென்னிந்தியாவின் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இந்திய தேசிய உணவக சங்கம், இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் , பெங்களூரு ஹோட்டல் சங்கம், சென்னை ஹோட்டல் சங்கம், சென்னை தேநீர் கடைகள் சங்கம், ஒடிசா ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சங்கம் (HRAO) மற்றும் பல ஹோட்டல் உரிமையாளர்கள் எரிவாயு பற்றாக்குறையால் தங்கள் கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையில், மும்பையில் சுமார் 20 வீத ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் நிலைமை சீராகவில்லை என்றால், மும்பையில் சுமார் 50 வீத ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்று தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )