
பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு
ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்குவைத்து பதில் தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டை அமைச்சர்கள் மறுபரிசீலனை செய்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிகரித்து வரும் மோதல்கள் ஈரானிய ஆட்சி, அல்லது அதன் சார்பாக செயல்படும் குழுக்கள் பிராந்தியத்திற்கு அப்பால் பழிவாங்க முயற்சி செய்யலாம் என்ற கவலையைத் தூண்டியுள்ளது.
தற்போது, ஈரான் மத்திய கிழக்கு முழுவதும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்தவொரு முறையான மாற்றத்தையும் உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவிப்பார் என்றும் ஹீலி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எங்கள் உளவுத்துறை அமைப்புகள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் எங்கள் திறன் மீது முழு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
