மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் அமைதியின்மை நிலவி வரும் அமைதி இன்மையை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதன்படி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனையும் உறுதி செய்வதற்காக அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில், தற்போது நாட்டில் தங்கி இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாள் இலவச விசா நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ மாற்று விமான வழிகளையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், 24 மணி நேர உதவி பிரிவுகளும் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, சுற்றுலாப் பயணிகள் 1912  துரித இலக்கத்தின் ஊடாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1989 என்ற துரித இலக்கத்தின் ஊடாகவும் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )