போர் பதற்றம் – வெளிநாட்டு பயணிகளுக்கு 07 நாட்கள் இலவச விசா நீடிப்பு

போர் பதற்றம் – வெளிநாட்டு பயணிகளுக்கு 07 நாட்கள் இலவச விசா நீடிப்பு

மத்திய கிழக்கில்  போர் பதற்றம் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு  அரசாங்கம் ஏழு நாட்கள் இலவச விசா நீடிப்பை அறிவித்துள்ளது.

விமானங்கள் தடைபட்டாலோ அல்லது இரத்து செய்யப்பட்டாலோ இலங்கையில் தங்கியிருக்கும் போது விசாக்கள் காலாவதியாகும் அனைத்து வெளிநாட்டினருக்கும் ஏழு நாட்கள் இலவச விசா நீடிப்பு  பொருந்தும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஏற்பாட்டின் கீழ், பயணிகளுக்கு அவர்களின் தற்போதைய விசாக்களுக்கு ஏழு நாட்கள் இலவச நீட்டிப்பு வழங்கப்படும்.

இதனால் அவர்கள் பயணத் திட்டங்களை மறுசீரமைக்க நேரம் கிடைக்கும் என்பதுடன்  தங்குவதற்கும் அபராதம் விதிக்கப்படாது.

சர்வதேச விமான அட்டவணைகளில் தற்போதைய இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயணிகளை ஆதரிப்பதற்கும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்போது பயணிகள் நாட்டில் சட்டப்பூர்வமாக தங்கியிருப்பதை உறுதி செய்வதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அறிவிக்க்பபட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )