மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டம்

மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டம்

மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தார் எனக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர் நாடாளுமன்றம் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களை இலக்கு வைத்ததாகப் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

இணையத்தில் அவரது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்காணித்த அதிகாரிகள், அவரது இல்லத்தில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து இந்த iகது நடவடிக்கையை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இந்த இளைஞர் மீது பயங்கரவாதச் சதி, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பெர்த் நகரில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் முயற்சிக்கு சில வாரங்களுக்குப் பிறகு இந்த முக்கியக் கைது நிகழ்ந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் விரிவாக நடைபெற்று வருவதாக அவுஸ்திரேலியா பொலிஸார் கூறியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )