க​னடா பிரதமர் மார்க் கார்னி இன்று இந்தியா பயணம்

க​னடா பிரதமர் மார்க் கார்னி இன்று இந்தியா பயணம்

க​னடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்​கள் அரசு முறை பயண​மாக இன்று மாலை இந்​தியாவுக்குச் செல்ல உள்ளார்.

இந்​தி​யா – கனடா இடையே நெருங்​கிய நட்​புறவு பல தசாப்தங்களாக தொடர்ந்துவந்த நிலையில், முன்​னாள் பிரதமர் ஜஸ்​டின் ட்ரூடோவின் ஆட்சிக்காலத்​தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் திகதி கனடாவை சேர்ந்த காலிஸ்​தான் தீவிர​வாதி ஹர்​தீப் சிங் நிஜ்ஜார் மர்​ம​மான முறை​யில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

இந்த கொலை​யில் இந்​திய தூதரக அதி​காரி​களுக்கு தொடர்பு இருப்​ப​தாக  ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டினார்.

இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவில் நெருக்கடிகள் எழுந்தன.  இந்த நிலையில் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதன் பிரகாரம் இந்த விஜயம் அமைந்துள்ளதாக கனடா அரசாங்கம் கூறியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )