
சமிக்கையை மீறி சென்ற உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு – கிளிநொச்சியில் சம்பவம்
விசேட அதிரடிப்படையினர் சமிக்கையை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரம் விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்திய போதும் சமிக்கையை மீறி சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளார்கள்.
சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திர வாகனத்தில் மணல் ஏற்றி செல்வது விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே குறித்த வாகனத்தை நேற்று இரவு துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவத்தின் விசேட அதிரடிப்படையினர் ஒருவர் உழவு இயந்திரத்தில் மோதுண்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திர சாரதி ஒருவர் தப்பி ஓடி உள்ள நிலையில் மற்றைய உழவு இயந்திர சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
