கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

திருவிழா தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் இறைவிசுவாசிகளின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், கழிவறை வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, கடல் மற்றும் தரைவழி போக்குவரத்து ஒழுங்குகள், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும், இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதேவேளை, கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய இறைவிசுவாசிகள் பாதுகாப்பு தரப்பினர் வழங்கும் உரிய நடைமுறைகளை பின்பற்றி நடந்துகொள்வதன் ஊடாக சிரமங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அச்சமின்றி அனைவரும் தமது வழிபாடுகளை செய்வதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )