உக்ரைனுக்கு பிரித்தானியாவின் நிதியுதவி – £55 மில்லியன் அறிவிப்பு

உக்ரைனுக்கு பிரித்தானியாவின் நிதியுதவி – £55 மில்லியன் அறிவிப்பு

உக்ரைனுக்கு இராணுவ, மனிதாபிமான மற்றும் உட்கட்டமைப்பு நிதியுதவியை பிரித்தானியா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்று செவ்வாயக்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, உக்ரைனின் எரிசக்தி கட்டத்தைப் பாதுகாக்கவும், கூடுதல் உற்பத்தி திறனை வழங்கவும் அவசர எரிசக்தி ஆதரவுக்காக 20 மில்லியன் பவுண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மோதலின் முன்னணியில் உள்ள சமூகங்களுக்கு 5.7 மில்லியன் பவுண்டுகள் மனிதாபிமான உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைனிய சமூக மீள்தன்மையை ஆதரிக்கவும், ரஷ்ய போர்க்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை மேற்கொள்ளவும் 30 மில்லியன் பவுண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரித்தானியாவும், ரஷ்யாவும் தவிர்க்க முடியாத மோதல் போக்கில் இருப்பதாக பிரித்தானிய இராணுவத்தின் உயர் அதிகாரியான ஜெனரல் சர் ரோலி வாக்கர் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )