ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் குறைந்தது

ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் குறைந்தது

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, ஜனவரி 2026 மாதத்திற்கான பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 டிசம்பரில் 2.9% ஆக பதிவான நாட்டின் பணவீக்கம், 2026 ஜனவரியில் 2.4% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 டிசம்பரில் 4.4% ஆக இருந்த உணவுப் பிரிவில் முதன்மை பணவீக்கம், 2026 ஜனவரியில் 3.4% ஆகக் குறைந்துள்ளது.

மேலும், டிசம்பர் 2025 இல் உணவு அல்லாத பிரிவில் ஆண்டு பணவீக்கம் (சதவீத அடிப்படையில்) 1.6% ஆக இருந்த நிலையில், 2026 ஜனவரி மாதத்தில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல் அதே அளவில் பதிவாகியுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )