
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது உள்நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி இலங்கையில் தங்கத்தின் விலைசுமார் 3,000 ரூபா அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை 9,000 ரூபா அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 காரட் கொண்ட ஒரு கிராம் 51,200 ரூபாவிற்கு விற்பகை செய்யப்படுவதுடன், ஒரு பவுண் 409,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
22 காரட் கொண்ட ஒரு கிராம் 46,900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு பவுண் 375,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதனிடையே, 21 காரட் கொண்ட ஒரு கிராம் 44,750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு பவுண் 358,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
