
இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினாலமு் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை – அமெரிக்க தூதுவர்
இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினால் தான் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹக்காபி (Mike Huckabee) தெரிவித்துள்ளார்.
பழமைவாத விமர்சகர் டக்கர் கார்ல்சன் (Tucker Carlson) உடன் நடைபெற்ற ஒரு நேர்காணலில் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இஸ்ரேலின் எல்லைகள் பைபிளில் வேரூன்றியவை என்ற தனது நிலைப்பாட்டை அமெரிக்க தூதுவர் மைக் ஹக்காபி மீண்டும் வலியுறுத்தினார்.
பைபிளில், ஆபிரகாமின் சந்ததியினருக்கு எகிப்தின் நைல் நதி முதல் ஈராகில் உள்ள யூப்ரடீஸ் நதி வரை உள்ள நிலம் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கார்ல்சன் குறிப்பிட்டார்.இந்த பகுதியில் இன்றைய லெபனான், சிரியா, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகள் அடங்கும்.
இந்நிலையில் இஸ்ரேல் குறித்த அனைத்து நிலங்களை எடுத்துக்கொண்டாலும் தனக்கு ஆட்சேபனை இல்லை” என்று ஹக்கபி கூறினார்.
