நதாஷாவை கைது செய்தமைக்கு வருந்துவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவிப்பு

நதாஷாவை கைது செய்தமைக்கு வருந்துவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவிப்பு

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் நகைச்சுவைக் கலைஞர் நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி இன்று (19) உயர்நீதிமன்றில் கவலை வெளியிட்டார்.

இந்த வருத்தம் தெரிவிக்கும் வகையிலான கடிதமொன்றையும் அரச சட்டவாதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதற்கு மேலதிகமாக, இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்யும் போது இடம்பெறக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகப் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளை உள்ளடக்கிய வழிகாட்டல் கோவையொன்றை வெளியிடப் பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் அரச சட்டவாதி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோடாபிமானய’ (முட்டாள்தனமான பெருமை) எனும் பெயரில் கொழும்பில் உள்ள பிரபல அரங்கு ஒன்றில் அவரால் நிகழ்த்தப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியொன்றில், பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து, 2023 ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நகைச்சுவை கலைஞரான (Standup Comedian) நதாஷா எதிரிசூரிய குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )