மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைது

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைது

பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரர், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்போக் – சாண்ட்ரிங்ஹாமில் ஆண்ட்ரூவின் வீட்டில் தேம்ஸ் பொலிஸாரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது அலுவலகத்தில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அவர்  செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வர்த்தக தூதராக பணியாற்றிய காலத்தில் ஆண்ட்ரூ, முக்கிய அரசாங்கத் தகவல்களை வெளிப்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார்.

குறிப்பாக மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான அவரது உறவுகள், அண்மை காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

எப்ஸ்டீன் கோப்புகளில் , ஆண்ட்ரூ உத்தியோகப்பூர்வ கடமைகளின் போது முறையற்ற வகையில் செயற்பட்டார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )