
பூனைகள் மூலம் ஏற்படும் நீர்வெறுப்பு நோய் குறித்து எச்சரிக்கை
நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பூனை கடி சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. பூனையின் கடி மட்டுமன்றி, அதன் கீறலும் கடித்ததற்கு சமமான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது என விசேட வைத்திய நிபுணர் அத்துல லியனபத்திரன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் பதிவான நோயாளிகளில் பெரும்பாலானோர், வீதியோர நாய்களால் அல்லாமல் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகும் நிலையில், 100% மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த கொடிய நோயிலிருந்து தப்பிக்க, செல்லப் பிராணிகள் விஷயத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
