மாநில சுயாட்சி வேண்டும் – மு.க.ஸ்டாலின்

மாநில சுயாட்சி வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் அண்ணா, தனது இறுதி உயிர் போல எழுதியது தான் மாநில சுயாட்சி கொள்கை. அவரது மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக முன்னாள் முதல்வர் கருணாநிதி வடிவமைத்து தந்தார் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஒரு மாநிலமாக மக்கள் காணும் கனவை முழுமையாக நிறைவேற்ற நம்மிடம் அதிகாரம் இல்லை. ஏனெனில், மாநில உரிமைகளை வழங்கும் மத்திய அரசு அமையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லா அதிகாரங்களையும் கொண்டவையாக மாநில அரசுகளை மாற்றும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )