
தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் உயர்வு
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
