அரசாங்கம் அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது – சந்திரிக்கா குற்றச்சாட்டு

அரசாங்கம் அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது – சந்திரிக்கா குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் கடந்த கால நிர்வாகங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவை சந்திக்க மெகசின் சிறைச்சாலைக்குச் சென்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நான் வழக்கமாக சிறைச்சாலைகளுக்குச் செல்வதில்லை. சமன் ஏகநாயக்க சிறந்த மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி ஆவார். நாட்டை நடத்துவதற்கு நமக்கு ஒரு திறமையான நிர்வாக சேவை தேவை.

நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல சிறந்த நிர்வாக சேவை தேவை. கடந்த காலங்களில் சமன் ஏகநாயக்கவுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.

அவர் ஒரு சிறந்த மனிதர். ஆகையினால் அவரை பார்க்க சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன்” என சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )