
நியூசிலாந்து அணி, ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி
சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு இருபதுஉலகக் கிண்ணத் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில், கனடா அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய நியூசிலாந்து அணி, ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு, இளம் வீரர் யுவராஜ் சம்ரா மற்றும் தலைவர் தில்ப்ரீத் பஜ்வா ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.
64 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சம்ரா, 11 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 110 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கிண்ண வரலாற்றில் சதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும் யுவராஜ் சம்ரா இந்த சதத்தின் மூலம் பெற்றுள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 173 ஓட்டங்களை கனடா அணி பெற்றுக்கொண்டது.
174 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.
நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ரிச்சன் ரவீந்திரா மற்றும் க்ளென் ப்ளிப்ஸ் ஆகியோரின் அதிரடியால் நியூசிலாந்து அணி இமாலய வெற்றி இலக்கை இலகுவாக அடைந்திருந்தது.
ரச்சின் ரவீந்திரா 59 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இதேவேளை, ஏ பிரிவில் இந்தியா அணியும், பி பிரிவில் இலங்கை அணியும், சி பிரிவில் மேற்கிந்திய தீவுகள் அணியும், டி பிரிவில் தென்னாபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தற்போதுவரை உறுதிப்படுத்தியுள்ளன.
நேற்றைய தினம் இலங்கை அணியுடனான தோல்வியின் காரணமாக அவுஸ்ரேலியா அணி இன்முறை சூப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகுவது கடினமாகியுள்ளது. பி பிவிரிவில் இலங்கை அணியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற சிம்பாவே அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.
