சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிதியான விசாரணை அவசியம்

சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிதியான விசாரணை அவசியம்

யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிதியான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

யாழ். அல்லைப்பிட்டியில்  அண்மையில் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் சிறுவர் ஒருவர் பொலிஸாரைால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து இதுவரையில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட இந்த சிறுவனின் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் இடம்பெற்ற உரிய தீர்வை குறித்த சிறுவனின் குடும்பத்துக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This