
மாகாண சபை தேர்தலை உடன் நடத்துங்கள்
கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அதிகளவான மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம் என அரசாங்கம் கருதுமானால், மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
குழுக்கள், தெரிவுக் குழுக்கள் என்று பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தியும் தேர்தல் முறையை மாற்றுவதாகவும் கூறி, மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துவது ஏன் எனவும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்திற்கு 65% மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், காண சபை தேர்தலை நடத்த வேண்டும். அதனைவிடுத்து தாமதப்படுத்துவதேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் காணப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி இருக்கிறது.
உலகின் ஜனநாயக நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது ஊழல் மற்றும் இலஞ்சத்தை குறைத்து அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அடிப்படையிலாகும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
