பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுமார் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகித உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, டிசம்பரில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி பதவியேற்றபோது இந்த எண்ணிக்கை 4.1 வீதமாக காணப்பட்டது.

பொருளாதார வளர்ச்சிக்கு தற்போதைய அரசாங்கம் உறுதியளித்திருந்த நிலையில், வேலையின்மை விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது வேலையில்லாதவர்கள் வேலை தேடுவதில் தீவிரம் காட்டியுள்ளதாகவும், பணிநீக்கங்களும் அதிகரித்து வருவதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )