இலங்கை அகதிகள் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் பங்கு போதுமானதா – அரசியல் ஆய்வாளர் கேள்வி

இலங்கை அகதிகள் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் பங்கு போதுமானதா – அரசியல் ஆய்வாளர் கேள்வி

மேலைநாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்களின் பிள்ளைகள் இன்று நன்றாக கல்வி கற்று பெரிய துறைகளில் பிரகாசிக்கும்போது, அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் எமது உள்ளங்கள் படும் நிலையை இந்திய மத்திய அரசு மனிதாபிமான முறையில் கருத்தில் கொள்ளவில்லை என்பது கேள்வியாகத் தொக்கி நிற்கிறதென மனிதாபிமான பணியின் அரசியல் ஆய்வாளர் இரவீந்திரராசா கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“இந்திய நிதியமைச்சர் மதிப்புமிகு நிர்மலா சீதாராமன் மிகவும் ஆளுமைமிக்கவர். வடக்கு–கிழக்கிற்கு விஜயம் செய்தவர். இலங்கையின் இனப்பாகுபாடு மற்றும் இலங்கை நிலைமைகளை நன்றாகத் தெரிந்தவர். பாடல்பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரத்திற்கு ஒரு சைவ பிராமண குருக்கள் தேவையென்பதைக்கூட துல்லியமாக ஆராய்ந்து நிவர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு இலங்கையை நன்றாகத் தெரிந்தவர்.

ஏனைய மேற்கத்திய நாடுகள், சொந்த நாடுகளில் பயத்தால் வெளியேறியவர்களை கண்ணியமாக நடத்தி, அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமைகளுடன் வாழக்கூடிய நிலை உருவாக்கியதைப் போல, இந்தியாவும் ஐநா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பின் விதிகளுக்கமைய நடைமுறைப்படுத்தியிருக்கலாம்.

அப்படி செய்வதற்கான வளங்கள் இல்லாவிடின், ஐநா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பினரிடம் தங்களுடைய இயலாமையை வெளிப்படுத்தி, இந்தியாவில் இருக்கும் இலங்கையர்களை வெளிநாடுகளில் குடியமர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்த அல்லது எதிர்நோக்கிய அவலங்களிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )