சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 இலட்சத்தைக்  கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 இலட்சத்தைக் கடந்தது

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐ கடந்துள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 401,787 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.

இதன்படி, இந்தியாவிலிருந்து 70,880 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து 44,053 பேரும், ரஷ்யாவிலிருந்து 36,949 பேரும் வருகை தந்துள்ளனர்.

அத்துடன் ஜெர்மனிய பிரஜைகள் 28,332 பேரும், சீன பிரஜைகள் 22,309 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், பெப்ரவரி மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 124,460 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )