
காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சி
கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்ள பூ விற்பனையாளர்கள், இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிக விலை மற்றும் மக்களின் குறைந்த கொள்வனவு சக்தியே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு சாதாரண நாட்களில் சுற்றப்பட்ட சிவப்பு ரோஜா ரூ. 350 இற்கு விற்கப்படும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு அதன் விலை அதிகரித்துள்ளதாக கூறும் விற்பனையாளர்கள், ஒரு பூச்செண்டு ரூ.2500 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறதாகவும் தெரிவித்துள்ளனர்.
விலைகள் அதிகரித்துள்ளமையின் காரணமாகவே தமது விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
